26 வயது பெண்ணை திருமணம் செய்த ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர்…

26 வயது பெண்ணை திருமணம் செய்த ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர்…

26 வயது பெண்ணை 5வது முறையாக ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர் நிக்கோலஸ் திருமணம் செய்துக்கொண்டார்.

26 வயது பெண்ணை திருமணம் செய்த ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர்…

தன்னுடைய நடிப்பால் உலக ரசிகர்களை கவர்ந்தவர் ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவர் ரைசிங் அரிசோனா, தி ராக், ஃபேஸ் ஆப், கான் இன் 60 செகன்ட்ஸ், நேஷனல் டிரஷர், கோஸ்ட் ரைடர் என 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று வருகிறார். தன்னுடைய சிறந்த நடிப்பால் 1964ம் வெளியான ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். இந்த விருதை தனது 32 வயதிலேயே இவர் பெற்றார் என்பதுதான் பெரிய சாதனை.

26 வயது பெண்ணை திருமணம் செய்த ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர்…

இவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது சுவாரஸ்யமானது. இதுவரை நான்கு திருமணங்கள் இவருக்கு நடைபெற்றுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு நடிகை பாட்ரிசியா அர்குவேட்டுடன் முதலாவது திருமணமும், 2002ம் ஆண்டு லிசா மேரி பிரெஸ்லியுடன் இரண்டாவது திருமணமும், 2004ம் ஆண்டு ஆலிஸ் கிம்முடன் மூன்றாவது திருமணமும் செய்துள்ளார். அதன்பிறகு 2019ம் ஆண்டு எரிகா குக்கியை திருமணம் செய்து வெறும் 4 நாட்கள் மட்டும் வாழ்ந்துள்ளார்.

26 வயது பெண்ணை திருமணம் செய்த ஆஸ்கர் விருதுபெற்ற நடிகர்…

இந்நிலையில் 57 வயதாகும் நிக்கோலஸ், தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார். லாஸ் வேகாஸில் உள்ள வின் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி நடந்த இந்த திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story