துள்ளாத மனமும் துள்ளும் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பார்த்திபன்!

துள்ளாத மனமும் துள்ளும் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் இயக்குனரின் எழில் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பல திறமையான நட்சத்திரங்களில் ஒருவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நகைச்சுவை என பன்முகத்திறமை கொண்டவர். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவை. இவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ஒத்த செருப்பு படம் பல பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்தது.

துள்ளாத மனமும் துள்ளும் பட இயக்குனருடன் கைகோர்க்கும் பார்த்திபன்!


விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் இயக்குனராக அறிமுகமானார் எழில். இவரது படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

தற்போது நடிகர் பார்த்திபன் இயக்குனர் எழிலின் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் காமெடி ஜேர்னர் படமான ‘ஜகஜால கில்லாடி’ படத்தை எழில் இயக்கி வருகிறார். இப்படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Jagajaala Killadi

மேலும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story