அது நடந்தா ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

அது நடந்தா ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா.

அது நடந்தா ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் பவித்ரா. ‘இரட்டை வால் குருவி’, ‘மனமே’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தாலும் ரசிகர்களை அவர், பெரிய அளவில் கவரவில்லை. இதைத்தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ 2வது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றார்.

அது நடந்தா ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

இதையடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் பவித்ரா நடித்து வருகிறார். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது நடந்தா ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

இந்நிலையில் நடிகை பவித்ரா ‘தளபதி 65’ படத்தில் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பவித்ரா லட்சுமி, அப்போது இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நான் ‘தளபதி 65’ படத்தில் நடிப்பதாக வந்த தகவலே நீங்க சொல்லிதான் தெரியுது. நீங்கள் சொன்னது நடந்தால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் என்று கலப்பாக கூறிவிட்டு சென்றார்.

Share this story