‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஸ்ரீநிதி ஷெட்டி…

‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஸ்ரீநிதி ஷெட்டி…

பிரபாஸ் -ஸ்ருதிஹாசன் நடிக்கும் சலார் படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு ஸ்ரீநிதி ஷெட்டி டான்ஸ் ஆடவிருக்கிறார்.

‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஸ்ரீநிதி ஷெட்டி…

பிரஷாந்த் நீல் இயக்கி பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. நடிகர் யாஷ் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகி வெளியாக உள்ளது. இந்த படத்தில் யாஷ்க்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. அதன்பிறகு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஸ்ரீநிதி ஷெட்டி…

இதையடுத்து கேஜிஎப்’ படத்தை இயக்கிய அதே பிரஷாந்த் நீல் தற்போது ‘சலார்’ இயக்கி வருகிறார். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் பத்திரிக்கையாளர் கேரக்டரில் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி இப்படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம்‌ வெளியாக உள்ளது.

‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ஸ்ரீநிதி ஷெட்டி…

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரானா காரணமாக அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளதால். ‘சலார்’ படத்தின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடல் ஒன்று எடுக்கப்பட உள்ளது. அந்த பாடலில் நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் ஷூட்டிங் தொடங்கபோது இந்த படத்திற்கான பாடல் காட்சியாக்காப்படும் என கூறப்பட்டுள்ளது.

Share this story