ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ! வைரலாகும் புகைப்படங்கள் !

ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ! வைரலாகும் புகைப்படங்கள் !

இன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ”தலைவி” படத்தின் கேரக்டர் லுக் போஸ்டர்களை படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர். நடிகர் அரவிந்த்சாமி தனது பர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருந்தார். அவரைத்தொடர்ந்து நடிகர் சமுத்ரகனியும் படத்தில் இடம்பெற்றுள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ! வைரலாகும் புகைப்படங்கள் !

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தமிழில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். கங்கனா இப்படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ! வைரலாகும் புகைப்படங்கள் !

சமீபத்தில் தலைவி படத்திலிருந்து நடிகை பூர்ணா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரும் இடம்பெற்றிருந்த சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.மேலும் படத்தில் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் தெரியவந்த நிலையில் சமுத்ரகனியின் கதாபாத்திரம் மட்டும் யாருடையது என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் அவர் ஆர்.எம்.வீரபன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் ட்விட்டர் பதிவு செய்த சமுத்திரக்கனி ,
‘புரட்சித்தலைவர் அவர்களின் நினைவு தினத்தில்…அண்ணன் அரவிந்த்சாமி அவர்களுடன் நான் “தலைவி” திரைப்படத்தில்… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களுக்கு நன்றி…வெல்வோம்… என தெரிவித்துள்ளார்.

Share this story