வெற்றிமாறன் இயக்கத்தில் ‌ சிம்புவா ?..பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் ‌ சிம்புவா ?..பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

‘ஈஸ்வரன்’ படத்திற்கு நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் உள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‌ சிம்புவா ?..பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்

இந்த படத்தையடுத்து ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடிக்கவிருக்கிறார். ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். மேலும் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என வரிசையாக அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‌ சிம்புவா ?..பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்

இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வெற்றி மாறன் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். . இந்த இரு படங்களை முடித்து சிம்புடன் இணையலாம் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share this story