மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி…

மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி…

தமிழக முதல்வராக பொறுபேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூரி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி…

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் அதிமுக- பா.ஜ.க ஒரு கூட்டணியாகவும், திமுக – காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும் களத்தில் நின்றனர். கடைசியில் திமுக மாபெரும் வெற்றிப்பெற்று 159 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி…

இந்த பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முதல்முறையாக முதல்வராகும் ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகள், தொண்டர்கள், முக்கிய நபர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை நேரில் சென்றும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி…

இந்நிலையில் முதலமைச்சராக தேர்வாக உள்ள ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story