நடிகர் விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்.?… பரபரப்பாகும் தெலுங்கு படவுலகம்…

நடிகர் விஜய்யுடன்  இணையும் ஜூனியர் என்.டி.ஆர்.?… பரபரப்பாகும் தெலுங்கு படவுலகம்…

நடிகர் விஜய்யுடன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யுடன்  இணையும் ஜூனியர் என்.டி.ஆர்.?… பரபரப்பாகும் தெலுங்கு படவுலகம்…

நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 16 நாட்கள் இந்த ஷூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன்பிறகு சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யுடன்  இணையும் ஜூனியர் என்.டி.ஆர்.?… பரபரப்பாகும் தெலுங்கு படவுலகம்…

இந்நிலையில் தெலுங்கு படவுலகில் புதிய தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி நடிகர் விஜய்யும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை பிரம்மாண்ட உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யுடன்  இணையும் ஜூனியர் என்.டி.ஆர்.?… பரபரப்பாகும் தெலுங்கு படவுலகம்…

இது விஜய்யின் அடுத்த இரண்டு படங்களில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையேநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story