மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நழுவவிட்ட ஹிந்தி பட வாய்ப்பு !

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நழுவவிட்ட ஹிந்தி பட வாய்ப்பு !

தெலுங்கில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா படத்தில் இருந்து விலகியது போலவே, ஹிந்தியில் ஆமிர்கான் நடித்து வரும் ‘லால் சிங் சட்டா’ படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நழுவவிட்ட ஹிந்தி பட வாய்ப்பு !

‘பாரஸ்ட் கம்ப்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் தற்போது ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை கரீனா கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கேரக்டருக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே தான் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கெனவே விஜய்சேதுபதியின் கைவசத்தில் நிறைய படங்கள் இருப்பதால் தேதிகள் இல்லாமல் , அவர் இப்படத்தில் இருந்து நழுவிவிட்டார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நழுவவிட்ட ஹிந்தி பட வாய்ப்பு !

இதனால் விஜய்சேதுபதிக்கு பதிலாக வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் படக்குழு தற்போது இறங்கியுள்ளார்களாம்.

இது ஒரு புறம் இருக்க விஜய் சேதுபதி உடல் பருமனை குறைக்க தவறியதால் தான் இந்த வாய்ப்பு நழுவிப்போனதாகவும் கூறப்படுகிறது.

Share this story