வைரலாகும் நடிகர் விஜய்யின் மகனின் வீடியோ.. ரசிகர்கள் வரவேற்பு !

வைரலாகும் நடிகர் விஜய்யின் மகனின் வீடியோ..  ரசிகர்கள் வரவேற்பு !

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் 200 கோடி சாதனை படைத்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாஸ்டர்’ படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதையடுத்து தற்போது நெல்சன் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

வைரலாகும் நடிகர் விஜய்யின் மகனின் வீடியோ..  ரசிகர்கள் வரவேற்பு !

இதற்கிடையே நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் கனடாவில் திரைப்பட கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு இயக்குனராகவோ அல்லது நடிகராக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் சஞ்சய் விஜய் பற்றிய செய்திகள் மட்டும் வெளியாவது உண்டு.

இந்நிலையில் சஞ்சஞ் விஜய் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் சஞ்சய் பாடல் கேட்டுக்கொண்டே கார் ஓட்டிச் செல்வது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகள் அள்ளி வீசி வருகின்றனர்.

Share this story