‘மாஸ்டர்’ படத்துக்காக வந்த 154 கோடி ரூபாய்… வேண்டாம் என்று ஒதுக்கிய விஜய்… வரமா ; சாபமா.!?

‘மாஸ்டர்’ படத்துக்காக வந்த 154 கோடி ரூபாய்… வேண்டாம் என்று ஒதுக்கிய விஜய்… வரமா ; சாபமா.!?

பொங்கலுக்கு மாஸ்டர் படம் திரையரங்குக்கு வருகிறது என்பது உறுதியாக தெரிந்துவிட்டது. ரசிகர்களைப் பொறுத்தவரை முழு தியேட்டரும் நிரம்பி வழியனும், லாட்டரி சீட்டை கிழித்து பறக்கவிடனும், விசிலடிக்கணும், இதெல்லாம் இருந்தால்தான் ஓப்பனிங் காட்சி பார்த்த திருப்தி வரும்! தமிழக அரசும் 100 சதவிகித ஆடியன்ஸ்க்கு அனுமதி என்று சொல்லிவிட்டது. ரசிகர்கள் அத்தனைபேரும் நேற்றே பொங்கல் வந்துவிட்டது போல் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில்… கொரோனா தோற்று முழுமையாக முடிந்துவிட வில்லை! இந்த நேரத்தில் இப்படியொரு அனுமதி கொடுத்திருப்பது சரியா என்று சிலர் கொளுத்திப்போட, திரையுலகமே பற்றிக்கொண்டு எரிகிறது! இன்னொருபக்கம் தொலைக்காட்சி சேனல்களில் காலையிலிருந்தே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

‘மாஸ்டர்’ படத்துக்காக வந்த 154 கோடி ரூபாய்… வேண்டாம் என்று ஒதுக்கிய விஜய்… வரமா ; சாபமா.!?

விவாதத்தின் பேசுபொருள் என்னவா இருக்கிறது என்றால், கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில் இப்படியொரு அனுமதி கொடுத்தது தப்பு என்று ஒரு தரப்பு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னொரு தரப்போ, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கூடும் கூட்டங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது! ஒயின் ஷாப் பார்கள் திருந்திருக்கு அங்கேயெல்லாம் கொரோனா தொற்று வராது, என்று ஆரம்பித்து அவர்களும் தங்கள் தரப்பு நியாயங்களை பட்டிமன்ற பேச்சாளர்களைப் போல் அவர்களும் பாயிண்ட்டை அடுக்குகிறார்கள்!

‘மாஸ்டர்’ படத்துக்காக வந்த 154 கோடி ரூபாய்… வேண்டாம் என்று ஒதுக்கிய விஜய்… வரமா ; சாபமா.!?

இங்கேதான் நாம் இந்த செய்திக்கான ‘டைட்டில்’ பாயிண்ட்டுக்கு வரணும்… OTT தியேட்டர் ரிலீஸ் பஞ்சாயத்து ஆரம்பிக்குறதுக்கு கொஞ்சம் முன்னாடி நெட் ஃப்ளிக்ஸ் தளத்திற்கு மொத்த ரைட்ஸும் பேசப்பட்டு, தலைமையகமான அமெரிக்காவிலிருந்தே ஃபைனல் ரேட்டாக 154 கோடி ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு தயாரிப்பாளருக்கு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பைப் பொருத்தவரை இது அட்டகாசமான ஆஃபர். முடித்துவிடலாம் என்று முடிவெடுத்த நிலையில்தான், தியேட்டர் அதிபர்களின் கோரிக்கை வந்தது. இளைய தளபதியும் வியாபாரத்தில் முன்னப்பின்ன இருந்தால் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்! அதன் பிறகுதான் தியேட்டரில் ரிலீஸ் பண்ணும் முடிவுக்கே வந்திருக்கிறார் தயாரிப்பாளர்.

‘மாஸ்டர்’ படத்துக்காக வந்த 154 கோடி ரூபாய்… வேண்டாம் என்று ஒதுக்கிய விஜய்… வரமா ; சாபமா.!?

இப்போ பிரச்சினை என்னன்னா… இந்தப்படத்தைப் பார்க்க வருகிற ரசிகர்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் வந்து கொரோனா தொற்று கூடுதலாகப் பரவினால் அந்தப் பழி முழுக்க உங்கள் ‘இளைய தளபதி’ தலையில்தான் முடியும்! எந்தப்பஞ்சாயத்தும் இல்லாமல் எல்லாம் சரியாக நடந்தால் தமிழ் சினிமாவை வாழ வைத்த பெருமையும் ‘உங்கள் இளைய தளபதி’ க்கே சேரும்… 2021 ‘மாஸ்டர்’ அப்டேட் உங்கள் கையில்.!

Share this story