நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா ?… தெலுங்கு திரையுலகில் காட்டுத்தீயாய் பரவும் தகவல்…

நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா ?… தெலுங்கு திரையுலகில் காட்டுத்தீயாய் பரவும் தகவல்…

நடிகை அனுஷ்காவுக்கு, தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா ?… தெலுங்கு திரையுலகில் காட்டுத்தீயாய் பரவும் தகவல்…

தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தன் சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ‘அருந்ததி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘பாகமதி’ போன்ற படங்களில் தன்னுடைய  கம்பீரமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படத்தில் தேவசேனாவாய் நடித்து உலகளவில் புகழ்பெற்றார்.

நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா ?… தெலுங்கு திரையுலகில் காட்டுத்தீயாய் பரவும் தகவல்…

தற்போது 39 வயதாகும் அனுஷ்காவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இருந்தப்போதிலும் திரையுலகில் அவரை பற்றிய கிசுகிசுப்புகள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கிறது. முதலில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வந்தது. அதன்பிறகு விவாகரத்தான ஒரு கிரிக்கெட் வீரருடன் திருமணம் என்றனர். பின்னர் 44 வயதாகும் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை மணப்பதாக தகவல் வெளியானது.

நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா ?… தெலுங்கு திரையுலகில் காட்டுத்தீயாய் பரவும் தகவல்…

இதையடுத்து ‘பாகுபலி’ படத்தின் மூலம் பிரபாஸுடன் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். இந்நிலையில் அனுஷ்காவுக்கு துபாய் தொழிலதிபர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகவும், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் தொழிலதிபர், அனுஷ்காவை விட வயது குறைவானவர் என கூறப்படுகிறது.

Share this story