கருப்புக் குதிரையுடன் வெள்ளைக் குதிரையாக மயக்கும் நடிகை!

கருப்புக் குதிரையுடன் வெள்ளைக் குதிரையாக மயக்கும் நடிகை!

நடிகை டிகங்கனா சூர்யவன்ஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வரவேற்பைப் பெற்று வருகிறது.  

நடிகை டிகங்கனா சூர்யவன்ஷியின் ஹிந்தியில் பிக்பாஸ் 9-வது சீசனில் போட்டியாளராகப் பங்கு பெற்றார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

மற்ற வளரும் நடிகைகளைப் போல டிகங்கனாவும் அதிக போட்டோஷூட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது குதிரையுடன் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story