‘அவதார் 2’ படத்தில் டாம் க்ரூஸ் சாதனையை முறியடித்த டைட்டானிக் நடிகை!

‘அவதார் 2’ படத்தில் டாம் க்ரூஸ் சாதனையை முறியடித்த டைட்டானிக் நடிகை!

‘அவதார் 2’ படத்தில் ஒரு காட்சியில் நடித்த பிறகு நான் செத்துவிட்டேன் என்று நினைத்தேன் என ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார்.

நம் அனைவர்க்கும் ரோஸ் கதாபாத்திரத்தைத் தெரிந்திருக்கும். ஆம் டைட்டானிக் ரோஸ் தான். அப்படத்தில் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு நடிகை கேட் வின்ஸ்லெட் உலகளவில் பிரபலமானார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.

‘அவதார் 2’ படத்தில் டாம் க்ரூஸ் சாதனையை முறியடித்த டைட்டானிக் நடிகை!

தற்போது தான் அவதார் 2 படத்தின் ஒரு காட்சிக்காக 7 நிமிடங்கள் தண்ணீருக்கடியில் மூச்சு பிடித்து நடித்த திகில் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் இதற்கு முன்னர் டாம் க்ருஷின் சாதனையை முறியடித்துள்ளார். ஆம், மிஷன் இம்பாஸிபிள் படத்திற்காக டாம் க்ருஷ் நீருக்கடியில் 6 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

‘அவதார் 2’ படத்தில் டாம் க்ரூஸ் சாதனையை முறியடித்த டைட்டானிக் நடிகை!

கேட் வின்ஸ்லெட் பேசிய போது, “அந்தக் காட்சி முடிந்ததும் தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் எனது முதல் வார்த்தைகள்: நான் இறந்துவிட்டேனா? ’ஆம், நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கடவுளே, இது அற்புதம். உங்கள் மனம் முற்றிலுமாக விலகிச் சென்றுவிடும். நீங்கள் எதைப் பற்றியும் யோசிக்க முடியாது, தண்ணீருக்கு அடியில் உருவாகும் நீர்குமிழிகளைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.” என்றும் அவரின் நீர் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் .

அவதார் 2 அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வின்ஸ்லெட் ரோனல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Share this story