Sunday, February 28, 2021

Movie Stills

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய பிரபல நடிகை… வைரலாகும் கலர்ஃபுல் புகைப்படங்கள்…

பிரபல நடிகை நிரஞ்சனி தனது திருமணத்தையொட்டி பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் அகத்தியன், அஜீத் நடித்த ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி புகழ்பெற்றவர். அகத்தியனுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கனி, இவர் உதவி இயக்குனர் திருவை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பாகும் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி, சென்னை -28, அஞ்சாதே, சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .

அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி.இவர் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜே ரக்‌ஷனும் ஜோடியாக நிரஞ்சனியும் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் நிரஞ்சனிக்கும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து திருமணம் ‌செய்ய முடிவு செய்த இவர்கள், கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார்.இதில் நிரஞ்சனியின் சகோதரிகள் கனி மற்றும் விஜயலட்சுமி கலந்துகொண்டனர். கலர்ஃபுல்லாக நடந்த இந்த பார்ட்டியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

Latest Posts

Actress

TTN Cinema