கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

தியேட்டர் சென்று படம் பார்த்ததால் உருவான சர்ச்சைக்கு நடிகை நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார்.

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் ஆகி சமீபத்தில் வெளியானது. நடிகை நிவேதா தாமஸ் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார்.

கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

வக்கீல் சாப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு நடிகை நிவேதா தாமஸ் தான் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வக்கீல் சாப் படம் வெளியான போது நிவேதா தாமஸ் தியேட்டர் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்ததாகத் தெரிவித்து அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

கொரோனா பாதிப்புடன் தியேட்டர் சென்ற ரஜினியின் ரீல் மகள்!?ரசிகர்கள் ஆவேசம்!

அதையடுத்து, கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், தியேட்டர் சென்றது சரியா? என்ற வகையில் பலர் அவரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொறுப்பில்லாமல் நடந்துள்ளார் என்றும் பல கருத்துக்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்குத் தற்போது நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார்.

தான் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாகவும், மீண்டதால் தான் தியேட்டருக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

Share this story