2021 இந்த நடிகைக்கு தான் சூப்பர் வருடம் போல் இருக்கிறதே..!

2021 இந்த நடிகைக்கு தான் சூப்பர் வருடம் போல் இருக்கிறதே..!

கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் பலரும் படவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில் 2021 ஆண்டு முழுக்க பிஸி ஷெடுலை கைப்பற்றியுள்ளவர் நடிகை பிரியா பவானி ஷங்கர் தான்.

சமீபத்தில் தான் நடிகர் சிம்பு,கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள முப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ”பத்து தல” படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் இணைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று பிரியா பவானி ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படமான ருத்ரன்’ல் பிரியா இணைத்திருக்கும் தகவலை பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் தெரிவித்துள்ளார். இப்படத்தை கே.பி செல்வா இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ”பொம்மை” படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

Share this story