நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’.. பிரத்யேக புகைப்படங்கள் வெளியீடு

நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’.. பிரத்யேக புகைப்படங்கள் வெளியீடு

நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்கும் ‘தி நைட்’ படத்தின் பிரத்யேக போட்டோஷூட் ஒன்று வெளியுள்ளது.

நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’.. பிரத்யேக புகைப்படங்கள் வெளியீடு

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இவர், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புரவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரீலிசுக்கு தயாராக உள்ளது.

நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’.. பிரத்யேக புகைப்படங்கள் வெளியீடு

இந்நிலையில் ‘தி நைட்’ என்ற படத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது‌. இதையடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறு நடைபெற்று வருகிறது. அனிமல் த்ரில்லராக படமாக உருவாகி வரும் இப்படத்தின் கதாநாயகனாக இசையமைப்பாளர் விது நடித்து வருகிறார்.

நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’.. பிரத்யேக புகைப்படங்கள் வெளியீடு

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. ரங்கா புவனேஷ்வர் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வந்தது. கொரானா காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பிரத்யேக போட்டோ ஷூட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Share this story