சர்ச்சைகளிடையே வெளியான சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2’.. விரைவில் தமிழிலும் வெளியாகிறது !

சர்ச்சைகளிடையே வெளியான சமந்தாவின்  ‘தி பேமிலி மேன் 2’.. விரைவில் தமிழிலும்  வெளியாகிறது !

சர்ச்சைகளுடைக்கிடையே வெளியான சமந்தாவின் ‘ தி பேமிலி மேன் 2’ தொடர் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.

நடிகை சமந்தாவின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தி ஃபேமிலிமேன் 2’.  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ள இத்தொடர் கடந்த 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

சர்ச்சைகளிடையே வெளியான சமந்தாவின்  ‘தி பேமிலி மேன் 2’.. விரைவில் தமிழிலும்  வெளியாகிறது !

இந்த வெப் தொடர் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது என்று கூறி சீமான், வைகோ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்த வெப் தொடரை தடை செய்யக்கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக அரசு கடிதம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எழுதியது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த ‌‌‌பதிலும்‌ அளிக்காமல் உள்ளது.

சர்ச்சைகளிடையே வெளியான சமந்தாவின்  ‘தி பேமிலி மேன் 2’.. விரைவில் தமிழிலும்  வெளியாகிறது !

சர்ச்சையை கிளப்பியுள்ள ‘தி பேமிலி மேன் 2’ தொடர் ரிலீசாகி ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story