ஓடிடி வெளியானது சிம்புவின் ‘ஈஸ்வரன்’.. ரசிகர்கள் வரவேற்பு !

ஓடிடி வெளியானது சிம்புவின் ‘ஈஸ்வரன்’.. ரசிகர்கள் வரவேற்பு !

நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஓடிடி வெளியானது சிம்புவின் ‘ஈஸ்வரன்’.. ரசிகர்கள் வரவேற்பு !

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சிம்பு நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘ஈஸ்வரன்’. கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியான இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார்.

ஓடிடி வெளியானது சிம்புவின் ‘ஈஸ்வரன்’.. ரசிகர்கள் வரவேற்பு !

இந்த படத்தில் தமன் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. கிராமத்து பின்னணியில் உருவான இப்படத்தில் சிம்பு 30 கிலோ வரை எடையை குறைத்து ஒல்லியான தேகத்துடன் நடித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே திரையரங்கில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.

ஓடிடி வெளியானது சிம்புவின் ‘ஈஸ்வரன்’.. ரசிகர்கள் வரவேற்பு !

இந்நிலையில் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படம், திரையரங்கில் வெளியாகி 5 மாதங்கள் கழித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்படத்தக்கது.

Share this story