பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயண கதையில் சீதாவாக ‘கீர்த்தி சுரேஷ்’…

பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயண கதையில் சீதாவாக ‘கீர்த்தி சுரேஷ்’…

ஆதிபுரூஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயண கதையில் சீதாவாக ‘கீர்த்தி சுரேஷ்’…

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆதிபுரூஷ்’. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஓம்.ராவத் இயக்கி வருகிறார். இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட இருக்கிறது.

பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயண கதையில் சீதாவாக ‘கீர்த்தி சுரேஷ்’…

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் ‌முதற்கட்ட பணிகள் கடந்த ஆண்டே தொடங்கியது. ஆனால் கொரானா காரணமாக பணிகள் தடை பெற்று இருந்தது. ‌‌ இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியது. ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ‘கிரீன் மேட்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதிபுரூஷ். உருவாகி வருகிறது. அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

பிரம்மாண்டமாக உருவாகும் இராமாயண கதையில் சீதாவாக ‘கீர்த்தி சுரேஷ்’…

ராமாயணத்தை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாக நடிக்கின்றனர். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story