“ஆதிபுரூஷ்-ன் உலகம் உருவாகிறது” முழுவதும் ‘மோஷன் கேப்சரில்’ பிரபாஸ் படம்….

“ஆதிபுரூஷ்-ன் உலகம் உருவாகிறது”       முழுவதும் ‘மோஷன் கேப்சரில்’  பிரபாஸ் படம்….

முழுவதும் மோஷன் கேப்சரில் ஆதிபுரூஷ் உலகம் உருவாகுவதாக படக்குழு அறிவித்துள்ளார்.

“ஆதிபுரூஷ்-ன் உலகம் உருவாகிறது”       முழுவதும் ‘மோஷன் கேப்சரில்’  பிரபாஸ் படம்….

மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் படம் ‘ஆதிபுரூஷ்’. தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் ஓம்.ராவத் இயக்க உள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட இருக்கிறது.

“ஆதிபுரூஷ்-ன் உலகம் உருவாகிறது”       முழுவதும் ‘மோஷன் கேப்சரில்’  பிரபாஸ் படம்….

ராமாயண கதையை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாக நடிக்கின்றனர். சீதையாக நடிக்க அணுஷ்கா சர்மாவிடன் கடந்த வருடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் கர்ப்பமாக இருப்பதால் மறுத்துவிட்டார். பின்னர் கியாரா அத்வானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைசியாக கீர்த்தி சனோன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதன் முதற்கட்ட பணிகள் தொங்கியது. கொரானா காரணமாக எந்த பணியும் நடைபெறாமல் இருந்து.

“ஆதிபுரூஷ்-ன் உலகம் உருவாகிறது”       முழுவதும் ‘மோஷன் கேப்சரில்’  பிரபாஸ் படம்….

இந்நிலையில் ஆதிபுரூஷ் உலகத்தை இன்று முதல் உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோஷன் கேப்சரில் தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி வி.எஃப்.எக்ஸ்-க்கு செலவிடப்படுகிறது.

ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் ‘கிரீன் மேட்’ தொழில்நுட்பத்தை ஆதிபுரூஷ் படத்திற்கு பயன்படுத்த உள்ளனர். அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story