விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து வெளியேறிய அதிதி ராவ்!

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து வெளியேறிய அதிதி ராவ்!

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து நடிகை அதிதி ராவ் ஹைதரி விலகியதால் நடிகை ராஷி கண்ணா இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இது முழுக்க முழுக்க அரசியல் களம் கொண்ட படம் என்பதால், படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து வெளியேறிய அதிதி ராவ்!

‘96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முதலில் நடிகை அதிதி ராவ் ஹைதரி தான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது மற்ற படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்தப் படத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் இப்படத்திலிருந்து விலகியுள்ளார். தற்போது நடிகை அதிதிக்குப் பதிலாக இந்தப் படத்தில் நடிகை ராஷி கண்ணா நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Share this story