தியேட்டர் உரிமையாளர்கள் போட்ட நிபந்தனை… விஜய் டிவிக்கு கை மாற்றிய ‘ஏலே’ படக்குழு!

தியேட்டர் உரிமையாளர்கள்  போட்ட நிபந்தனை… விஜய் டிவிக்கு கை மாற்றிய ‘ஏலே’ படக்குழு!

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏலே’ திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லுக்கருப்படி இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘ஏலே‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கே மணிகண்டன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏலே திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் வைத்த நிபந்தனைகளால் படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

தியேட்டர் உரிமையாளர்கள்  போட்ட நிபந்தனை… விஜய் டிவிக்கு கை மாற்றிய ‘ஏலே’ படக்குழு!

அதாவது தியேட்டரில் வெளியாகும் படங்களில் சிறிய படங்கள் 30 நாட்கள் மற்றும் பெரிய படங்கள் 50 நாட்கள் கழித்து தான் டிஜிட்டல் தளங்களில் படத்தை வெளியிடுவோம் என்று உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நிபந்தனை வைத்துள்ளனர்.

எனவே ஏலே படக்குழுவினர் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்துள்ளனர். ஏலே திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி ஞாயிறு பகல் 3 மணிக்கு இப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

தியேட்டர் உரிமையாளர்கள்  போட்ட நிபந்தனை… விஜய் டிவிக்கு கை மாற்றிய ‘ஏலே’ படக்குழு!

இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஏலே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில், சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் திரையரங்குகளை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது . ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு, உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக , நேரடியாக இத்திரைப்படத்தினை வெளியிடுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டைத் தவிர மீதி அனைத்து பகுதிகளிலும்ஏலே திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது.

Share this story