‘தளபதி 65’ படத்தை அடுத்து ‘வலிமை’ படத்திலும் நடிப்பதை உறுதி செய்த யோகிபாபு!

‘தளபதி 65’ படத்தை அடுத்து ‘வலிமை’ படத்திலும் நடிப்பதை உறுதி செய்த யோகிபாபு!

நடிகர் யோகிபாபு தான் வலிமை படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

யோகிபாபு தற்போது தமிழின் முன்னணி காமெடி நடிகராக முன்னேறியுள்ளார். கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்துள்ளார், இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். அவரின் கடின உழைப்பே அவர் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.

‘தளபதி 65’ படத்தை அடுத்து ‘வலிமை’ படத்திலும் நடிப்பதை உறுதி செய்த யோகிபாபு!

யோகிபாபு தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே யோகிபாபு தெரிவித்திருந்தார்.

தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்திலும் தான் நடிப்பதாக யோகிபாபு தெரிவித்துள்ளார். யோகிபாபு ஏற்கனவே வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித் உடன் சேர்ந்து நடித்துள்ளார். தற்போது வலிமை படத்தில் நடிப்பதன் மூலம் அஜித் உடன் நான்காவது முறையாக யோகிபாபு இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story