ஆசியா போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ்பெண்ணின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! உண்மை என்ன!?

ஆசியா போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ்பெண்ணின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! உண்மை என்ன!?

சாந்தி சௌந்தராஜன் வாழ்க்கைப் படத்தில் தான் தான் நடிக்கப்போவதாக வெளியான செய்திகளுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்மணி சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குகிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார்.

ஆசியா போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ்பெண்ணின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! உண்மை என்ன!?

2006-ம் ஆண்டு தோஹா விளையாட்டுப் போட்டிகளில் தடகள வீரர் சாந்தி சௌந்தர்ராஜன் வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் பாலின பரிசோதனையில் தோல்வியடைந்ததால் அவர் பதக்கம் பறிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாந்திக்கு ஆண்ட்ரோஜன் இன்சென்சிடிவிட்டி சிண்ட்ரோம் என்ற பாதிப்பு இருந்ததால் பரிசோதனையில் அவருடைய உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருந்ததாகக் கூறி அவருடைய பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. இயற்கையான இந்த செயலுக்கு அவரின் பதக்கம் எப்படி பறிக்கப்படலாம் என்று பலர் குரல் எழுப்பினர்.

ஆசியா போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ்பெண்ணின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! உண்மை என்ன!?

சாந்தி சௌந்தராஜனின் வாழ்க்கைப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியாகின. தற்போது அந்த செய்திகளுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

“ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தி சௌந்தராஜனின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கவில்லை. அப்படி வெளியான ட்வீட்கள் அனைத்தும் போலியானவை. தயவு செய்து அந்த மாதிரி வதந்திகளை நம்பாதீர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

Share this story