அல்லு அர்ஜுனுக்கு தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அல்லு அர்ஜுனுக்கு தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கிறார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா‘ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

அல்லு அர்ஜுனுக்கு தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. தற்போது அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் தங்கையாக நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுனுக்கு தங்கையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Share this story