அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கவில்லை… ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு பதில்!

அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கவில்லை… ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு பதில்!

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என்று அவர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தமிழில் வெற்றி பெற்ற ‘கனா’ திரைப்படம் தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அந்தப் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘டக் ஜெகதீஸ்’ மற்றும்’ அய்யப்பனும்’ கோஷியம் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கவில்லை… ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு பதில்!

இதற்கிடையில், ஐஸ்வர்யா ராஜேஷ் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா‘ படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியாகின. தற்போது ஐஸ்வர்யா தரப்பிலிருந்து வெளியான தகவலில் அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கவில்லை… ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு பதில்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Share this story