ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!?

ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியாகிய ‘அய்யப்பனும் கோஷியும்‘ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

அதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இருவரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சூர்யா தேவர நாகவம்சி தயாரிக்க உள்ளார்.

ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!?

தற்போது இந்தப் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ராணாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!?

இதற்கு முன்னர் இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து சாய் பல்லவி அந்தப் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

எனவே படக்குழுவினர் இரண்டு கதாநாயகிகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Share this story