அஜீத் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்… தல61 அப்டேட்… #Thala61

அஜீத் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்… தல61 அப்டேட்… #Thala61

நடிகர் அஜீத்தின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘வலிமை’. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜீத்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.  ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி வலிமை படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளது.

அஜீத் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்… தல61 அப்டேட்… #Thala61

இதையடுத்து அஜீத்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என எதிர்பார்ப்பது நிலவி வந்தது. தற்போது அஜீத் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அஜீத்தின் 61வது படமாக வெளிவரவிருக்கும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் அஜீத்தை சந்தித்து பேசியுள்ளதாகவும், அப்போது ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை அஜீத்துக்கு பிடித்துள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து இருவரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்… தல61 அப்டேட்… #Thala61
Tamil Director Vijay Images Photos

இதற்கு முன்னர் விஜய்யின் தலைவா படத்தை இயக்கியுள்ள ஏ.எல்.விஜய், 2007ம் ஆண்டு அஜீத் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தையும் இயக்கியுள்ளார். இரண்டாவது முறையாக இணையவிருக்கும் இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this story