வேறொரு தயாரிப்பாளருடன் அஜித்- சுதா கொங்கரா கூட்டணியின் படம் உருவாகிறது!

வேறொரு தயாரிப்பாளருடன் அஜித்- சுதா கொங்கரா கூட்டணியின் படம் உருவாகிறது!

சூரரைப் போற்று படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் அஜித் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இறுதிச் சுற்று என்ற ஒரு படத்தின் மூலமே பெண்களாலும் மிகச் சிறந்த படங்களை இயக்க முடியும் என்று நிரூபித்தவர் சுதா கொங்கரா. இன்று வரை அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது இவர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்திற்காக அந்தாலஜி படம் ஒன்றையும் இயக்கி வருகிறார்.

வேறொரு தயாரிப்பாளருடன் அஜித்- சுதா கொங்கரா கூட்டணியின் படம் உருவாகிறது!

சுதா கொங்கரா அடுத்த எந்த நடிகரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் அதிகமாக உள்ளது. தளபதி 65 படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகக் கூட செய்திகள் வெளியாகின.

சில தினங்களுக்கு சுதா கொங்கரா அஜித்தை வைத்து அடுத்த படம் இயக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போதைக்கு எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

வேறொரு தயாரிப்பாளருடன் அஜித்- சுதா கொங்கரா கூட்டணியின் படம் உருவாகிறது!

தற்போது சுதா கொங்கரா- அஜித் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தை கோகுலம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோகுலம் கோபாலன் மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக நுழைந்தார். அவர் கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தைத் தயாரித்திருந்தார்.

வலிமை படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் அஜித் நடிப்பார் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story