லோகேஷ் இயக்கத்தில் அஜித், வினோத் இயக்கத்தில் விஜய்!?… இளம் இயக்குனர்களை கைக்குள் போடும் நடிகர்கள்!

லோகேஷ் இயக்கத்தில் அஜித், வினோத் இயக்கத்தில் விஜய்!?… இளம் இயக்குனர்களை கைக்குள் போடும் நடிகர்கள்!

இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஸ்டார் நடிகர்கள் அனைவருக்கும் பின்னால் ஒரு இயக்குனரின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதே உண்மை. அவர்கள் அந்த ஸ்டார் அந்தஸ்தைப் பெற அவர்களின் சினிமா வாழ்க்கையில் ஏதேனும் ஒரு முக்கிய படம்தான் காரணமாக அமைந்திருக்கும். தங்கள் அணு அணுவாக செதுக்கிய தங்கள் கனவுக் கதையை வைத்து வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அவர்களுக்கான ஸ்டார் மதிப்பை வாங்கி கொடுத்த பெருமை இயக்குனர்களையும் சாரும்.
லோகேஷ் இயக்கத்தில் அஜித், வினோத் இயக்கத்தில் விஜய்!?… இளம் இயக்குனர்களை கைக்குள் போடும் நடிகர்கள்!
முன்னணி நடிகர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஆஸ்தான இயக்குனர் ஒருவரை வைத்திருப்பர். அவர்கள் கதை என்றாலே நடிகர்கள் உடனே ஓகே சொல்லி விடுவார்கள் இது காலம் காலமாக சினிமாவில் நடந்து வருகிறது. அந்த நிலை கொஞ்சம் மாறி தற்போது விஜய் மற்றும் அஜித் இருவரும் திறமை உள்ள இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.
It's necessary that men understand consent: 'Nerkonda Paarvai ...
சதுரங்க வேட்டை, தீரன்அதிகாரம்ஒன்று போன்ற படங்களின் மூலம் கோலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்த இளம் இயக்குனர் H.வினோத். மூன்றாவது படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றார். அஜித் அவராகவே வினோத்திற்கு போன் செய்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
Grasp Will Be A Full Deal with For The Followers Of Vijay & Vijay ...
மாநகரம், கைதி என்ற இரண்டு படங்களின் மூலம் கோலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனர் ஆனார் லோகேஷ் கனகராஜ். மூன்றாவதாக விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்
நடிகர் விஜயின் வட்டாரம் அவருக்காக ஒரு கதை சொல்லுமாறு வினோத்திடம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வலிமை படத்திற்குப் பின்பு வினோத் இந்தப் படத்தின் வேலைகளைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் இயக்கத்தில் அஜித், வினோத் இயக்கத்தில் விஜய்!?… இளம் இயக்குனர்களை கைக்குள் போடும் நடிகர்கள்!
அதேபோல அஜித் தரப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனராம். அஜித் தரப்பிலிருந்து லோகேஷுக்கு போன் வந்ததாகவும் கூறப்படுகிறது. இரு இயக்குனர்களும் தற்போது தாங்கள் வேலை செய்யும் படங்கள் முடிந்த பிறகு அடுத்து படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story