மீண்டும் ரீலிசாகிறது அஜீத்தின் ‘பில்லா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

மீண்டும் ரீலிசாகிறது அஜீத்தின் ‘பில்லா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நடிகர் அஜீத் நடித்து சூப்பர் ஹிட் அடித்த பில்லா படம் மீண்டும் திரையரங்குகளில் ரீலிசாகிறது.

மீண்டும் ரீலிசாகிறது அஜீத்தின் ‘பில்லா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

1980ம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான படம் ‘பில்லா’. கேங்ஸ்டராக ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த இப்படம் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு மீண்டும் ரீமேக்கானது. அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஆரம்பம் உள்ளிட்டப் இயக்கிய விஷ்ணுவர்தன், நடிகர் அஜீத்தை செம ஸ்டைலிஷ்ஷாக இப்படத்தில் காட்டியிருந்தார். தல ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருவான இப்படத்தில் நயன்தாரா, நமிதா, பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மீண்டும் ரீலிசாகிறது அஜீத்தின் ‘பில்லா’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப்படம் அஜித்திற்கு புதிய பரிணாமத்தை கொடுத்த படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் ரீலிஸ் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து வரும் மார்ச் 12ம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பில்லா’ படம் வெளியாவதால் அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Share this story