அஜீத்தின் அடுத்த படமும் போனி கபூரே தயாரிக்கிறாரா ?… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…

அஜீத்தின் அடுத்த படமும் போனி கபூரே தயாரிக்கிறாரா ?… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…

‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜீத்தின் அடுத்த படமும் போனி கபூரே தயாரிக்கிறாரா ?… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…

நடிகர் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவரவிருக்கிற படம் ‘வலிமை’. ‘நேர்கொண்ட பார்வை’ இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தில் சுமித்ரா, ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை செய்து வருகிறார்.

அஜீத்தின் அடுத்த படமும் போனி கபூரே தயாரிக்கிறாரா ?… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…

இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத் பிறந்தநாளாக மே 1ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் நடிகர் அஜீத்தும் ‘வலிமை’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க ஸ்பெயின் செல்லவுள்ள படக்குழு, அந்நாட்டின் அனுமதிக்காக படக்குழு காத்துக்கொண்டிருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது.

அஜீத்தின் அடுத்த படமும் போனி கபூரே தயாரிக்கிறாரா ?… வெளியான ஸ்பெஷல் அப்டேட்…

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘வலிமை’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடியாக உள்ளதாகவும், இந்த படம் இந்தியா முழுமைக்குமான ‘பான் இந்தியா’ படமாக உருவாகியுள்ளதாக கூறினார். இன்னும் 7-லிருந்து 8 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும், இத்துடன் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தார். அஜீத்தின் 61வது படத்தையும் தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு, இதே படக்குழுவோடு மீண்டும் இணைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிதுள்ளார். இதனால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story