“என் சம்பளத்தைக் குறைச்சுக்கோங்க”… தயாரிப்பாளருக்கு ஈமெயில் அனுப்பிய தல அஜித்!?

“என் சம்பளத்தைக் குறைச்சுக்கோங்க”… தயாரிப்பாளருக்கு ஈமெயில் அனுப்பிய தல அஜித்!?

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ‘வலிமை’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்தில் ஹேமா குரைஷி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதே கூட்டணியில் உருவான ‘நேர்கொண்ட பார்வை’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
“என் சம்பளத்தைக் குறைச்சுக்கோங்க”… தயாரிப்பாளருக்கு ஈமெயில் அனுப்பிய தல அஜித்!?
கொரோனா வைரஸால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் அடுத்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கின்றனர். இதனால் நடிகர்கள் தாமாக முன்வந்து தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சில நடிகர்களும் டெக்னிசியன்களும் அவர்களாகவே முன்வந்து தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டது அனைவர் மத்தியிலும் பாராட்டப்பட்டு வருகிறது.
“என் சம்பளத்தைக் குறைச்சுக்கோங்க”… தயாரிப்பாளருக்கு ஈமெயில் அனுப்பிய தல அஜித்!?
நடிகர் அஜித்குமார் அவருடைய சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்வதாக தயாரிப்பாளருக்கு ஈமெயில் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
பெரிய ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் தான் திரையுலகம் மீண்டெழ முடியும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Share this story