இனி போனி கபூர் சரிவரமாட்டாரு… நேரடியா முதல்வரிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

இனி போனி கபூர் சரிவரமாட்டாரு… நேரடியா முதல்வரிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

அஜித் ரசிகர்கள் முதல்வர் பிரச்சாரக் கூட்டத்தில் வலிமை அப்டேட் என்று கத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் எத்தனையோ படங்களின் அப்டேட்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு. அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியிடுமாறு படக்குழுவிடம் கோரிக்கை வைக்காத நாளில்லை. இருப்பினும் வலிமை டீம் அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாய் இல்லை.

இனி போனி கபூர் சரிவரமாட்டாரு… நேரடியா முதல்வரிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

ஆனால் வலிமை படக்குழு முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடையாமல் படம் குறித்த அப்டேட் வெளியிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனி போனி கபூரிடம் கேட்டு பயனில்லை என்று விரக்தியடைந்த அஜித் ரசிகர்கள் தற்போது முதல்வரிடமே வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். ஆம், முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த சில அஜித் ரசிகர்கள் வலிமை, வலிமை அப்டேட் என்று கூச்சலிட்டனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story