‘வலிமை’ அப்டேட்டைக் காணவில்லை… போனி கபூரைக் கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்!

‘வலிமை’ அப்டேட்டைக் காணவில்லை… போனி கபூரைக் கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்!

மதுரையில் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்-ஐ காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது வைரலாகி வருகிறது.

தற்போது அஜித், ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொதுவாக அஜித் படங்கள் என்றாலே அவ்வளவாக அப்டேட் ஏதும் வெளியாகாது. எந்த வித முன்னறிவிப்புமின்றி திடிரென்று டீசர் இல்லை ட்ரைலரை இறக்கிவிடுவார்கள்.

‘வலிமை’ அப்டேட்டைக் காணவில்லை… போனி கபூரைக் கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள்!

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கும் அப்படி தான் நடந்தது. அதே போல வலிமை படம் குறித்த எந்தவொரு அப்டேட்-ம் இதுவரை வெளியாகவில்லை. அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கொடுக்குமாறு படக்குழுவை வலியுறுத்தி வருகின்றனர்.

விஜயின் மாஸ்டர் டீசர் அப்டேட், சூரரைப் போற்று ரிலீஸ், சிலம்பின் ஈஸ்வரன் டீசர், தனுஷ் ஜகமே தந்திரம் அப்டேட் என மற்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து தீபாவளி பரிசு அளித்து வருகின்றனர்.

ஆனால் அஜித் ரசிகர்கள் மட்டும் சூர்யவம்சம் சரத்குமார் போல பரிதாபமாக நிற்கின்றனர். இந்நிலையில் சற்று அதிகமாகக் கோபப்பட்ட மதுரை ரசிகர்கள் வலிமை அப்டேட்-ஐ காணவில்லை என்று போனி கபூரைக் குறிப்பிட்டு போஸ்டரே அடித்து ஒட்டிவிட்டனர்.

Image

“உயர்திரு போனி கபூர் அவர்களே, கடந்த 8 மாதங்களாக சமூக வலைத்தளங்களில் வலிமை திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்-ஐ காணவில்லை” என்று தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this story