”வலிமை” பற்றி ஒரு அப்டேட்டும் இல்லை கடுப்பில் உள்ள அஜீத் ரசிகர்கள் !

”வலிமை” பற்றி ஒரு அப்டேட்டும் இல்லை கடுப்பில் உள்ள அஜீத் ரசிகர்கள் !

நடிகர் அஜித் தற்போது நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட்களை சரிவர அஜீத்தின் பிஆர்ஓ கொடுக்காததால் அவரை மாற்றும்படி அஜித்தின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக எச்.வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜீத்தின் பிஆர்ஓ ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதன்படி , அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்பட குழுவிடம் சமூக ஊடகங்களில் அப்டேட்களை கேட்கவேண்டாம். சரியான நேரத்தில் சரியான அப்டேட்கள் அறிவிக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் அப்படி கூறியும் சரிவர அப்டேட் வராததால் தற்போது அதிருப்தியில் இருக்கும் ரசிகர்கள் பிஆர்ஓ வை மாற்றுங்கள் என ThalaChangeYourPRO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாகி வருகின்றனர்.

அஜித்துக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்றாலும், இந்த கோரிக்கையை அஜித்திடம் எப்படியாவது கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் முயற்சிக்கின்றனர்.

ரசிகர்களின் இந்த நடவடிக்கையால் ஆவது வலிமை படம் குறித்து விரைவில் நல்ல அப்டேட் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது

Share this story