ஆஸ்திரேலியாவிலும் பேனர் அடித்து நடராஜனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்!

ஆஸ்திரேலியாவிலும் பேனர் அடித்து நடராஜனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேட்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை உலக அரங்கில் அரங்கேற்றி வருகிறார்.

அரசியல் தலைவர்கள், மக்கள், திரைத்துறை பிரபலங்கள் என நடராஜனைப் பாராட்டாத ஆட்களே இல்லை என்று கூட சொல்லலாம். நடராஜன் வெற்றி பெற்றதை தாங்கள் வெற்றி பெற்றது போலவே தமிழக மக்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு உயரத்திற்கு சென்று இருப்பது அனைவருக்கும் ஊக்கத்தை அளித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவிலும் பேனர் அடித்து நடராஜனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்!

தற்போது அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவிலும் பேனர் அடித்து நடராஜனை வாழ்த்தியுள்ளனர். அஜித் ரசிகர்கள் போஸ்டர், பேனர் வைப்பதில் மின்னல் வேகம் கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

தற்போது கண்டம் கண்டம் விட்டு சென்று தங்கள் பேனர் கலாச்சார வளர்ச்சியைக் காண்பித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரவுண்டில் சில அஜித் ரசிகர்கள் நடராஜனை அஜித் சார்பாக வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story