Wednesday, June 16, 2021

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பாகுபாலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பிரம்மாண்டமாக...

Movie Stills

இந்த மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு… வலியுடன் வலிமை ஷூட்டிங் முடித்துக் கொடுத்துள்ள தல!

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் ரேஸிங்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதல் அஜித் ஹைதராபாத்தில் நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு... வலியுடன் வலிமை ஷூட்டிங் முடித்துக் கொடுத்துள்ள தல!

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.


அஜித் ரேஸிங் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வந்த போது வழக்கம்போல டூப் இல்லாமல் அவரே ஸ்டண்ட் செய்துள்ளார். அப்போது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. அதில் அவருக்கு கை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு... வலியுடன் வலிமை ஷூட்டிங் முடித்துக் கொடுத்துள்ள தல!

பின்னர் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்த செய்தி கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அஜித் கீழே விபத்து ஏற்பட்டவுடன் தனது மேனேஜருக்கு போன் செய்து அதே பைக் வேண்டும் என்று கேட்டு வரவைத்துள்ளார். பின்னர் மறுநாள் அடிபட்ட காயத்துடன் அதே ஸ்டண்ட் காட்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். படக்குழுவினர் அனைவரும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்கள்.

இருந்தாலும் இந்த மாதிரி பல விபத்துகளைப் பார்த்துவிட்டதாக எளிமையாகக் கடந்திருக்கிறார். பின்னர் வெற்றிகரமாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கின்றனர்.

அஜித்தின் அர்ப்பணிப்பைப் பார்த்த படக்குழு கட்டாயம் வியந்திருப்பார்கள் என்று யோசிக்காமல் நம்மால் சொல்ல முடியும்.

Latest Posts

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ராஜமௌலி.. வேகமெடுக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பாகுபாலிக்கு பிறகு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பிரம்மாண்டமாக...

தனது மகனுடன் நடிகை கனிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

நடிகை கனிகா தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் க்யூட் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை கனிகா....

திரையரங்கில் வெளியாகும் அருண் விஜய்யின் ‘பார்டர்’.. எப்போது தெரியுமா ?

அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய்,...
இந்த மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு... வலியுடன் வலிமை ஷூட்டிங் முடித்துக் கொடுத்துள்ள தல!இந்த மாதிரி எவ்வளவோ பாத்தாச்சு... வலியுடன் வலிமை ஷூட்டிங் முடித்துக் கொடுத்துள்ள தல!

Actress

-Advertisement-
TTN Cinema