‘கிரீடம்’ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அஜித்!?

‘கிரீடம்’ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அஜித்!?

நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தை அடுத்து இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

அஜித் தற்போது ஹெச் வினோத் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

‘கிரீடம்’ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அஜித்!?

‘வலிமை’ படத்தை அஜித்தை இயக்கப்போவது இவர்தான் என்று பல இயக்குனர்கள் பெயர் கூறப்பட்டு வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் உடன் அஜித் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கிரீடம்’ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் அஜித்!?

இந்நிலையில் தற்போது அஜித் வலிமை படத்தை அடுத்து இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அஜித் ஏற்கனவே விஜய் இயக்கத்தில் ‘கிரீடம்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎல் விஜய் தற்போது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘தலைவி’ படத்தில் மும்மரமாக பணியாற்றி வருகிறார்.

Share this story