Tuesday, June 15, 2021

முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சத்தை நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ் திரையுலகில் ரொம்பவே...

Movie Stills

உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு, ஆனா எனக்கு தொழில்… ரசிகர்கள் செயலால் கடுப்பான அஜித்!

நடிகர் அஜித் குமார், வலிமை அப்டேட் தொடர்ந்து கேட்டுவரும் தனது ரசிகர்கள் சிலரைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வலிமை படம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் கேட்டு போஸ்டர் அடித்தனர். முதல்வர் பிரச்சாரத்தில் போய் வலிமை அப்டேட் கேட்டனர். நேற்று பிரதமர் சென்னை வந்த போது அங்கும் சென்று வலிமை அப்டேட் கேட்டுள்ளனர்.

சிறிது நேரத்திற்கு முன்பு ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியிட நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று தெரிவித்து போனி கபூர் பதிவு வெளியிட்டிருந்தார்.

தற்போது அஜித் தனது சில ரசிகர்களின் செயல் தன்னை வருத்தமுறச் செய்வதாகத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு, ஆனா எனக்கு தொழில்... ரசிகர்கள் செயலால் கடுப்பான அஜித்!

அறிக்கை பின்வருமாறு”

“என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் , சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

வலிமை படத்தின் அப்டேட் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Latest Posts

முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சத்தை நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ் திரையுலகில் ரொம்பவே...

தள்ளிப்போகிறதா ‘பாபநாசம் 2’ ?.. கமலின் திட்டம் இதுதான் !

'பாபநாசம் 2' எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டு பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற...

கொரோனாவுக்கு மத்தியில் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பைத் துவங்கிய விஷால்!

நடிகர் விஷால் தான் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் மீண்டும் துவங்குவதற்காக ஹைதராபாத் சென்றுள்ளதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். விஷால் கடைசியாக ஆனந்த்...

சாந்தனு- அதுல்யாவின் கலக்கல் கெமிஸ்ட்ரி… டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு முழு வீடியோ வெளியானது!

'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் இடம் பெற்றுள்ள டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது. தரண் குமார் இசையில் சிவாங்கி மற்றும்...
உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு, ஆனா எனக்கு தொழில்... ரசிகர்கள் செயலால் கடுப்பான அஜித்!உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு, ஆனா எனக்கு தொழில்... ரசிகர்கள் செயலால் கடுப்பான அஜித்!

Actress

-Advertisement-
TTN Cinema