வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ – விஜய்யை வம்பிழுக்கும் அஜித் ரசிகர்கள் !

வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ – விஜய்யை வம்பிழுக்கும் அஜித் ரசிகர்கள் !

வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ என அஜித்தின் புதிய புகைப்படங்களை பகிர்ந்து விஜய்யை வம்பிழுத்துள்ளனர் ரசிகர்கள்.

வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ – விஜய்யை வம்பிழுக்கும் அஜித் ரசிகர்கள் !

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் ரசிகர்கள் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெறிக்கவிட்டிருந்தனர்‌. இதனால் அதிருப்தி அடைந்த அஜித் அறிக்கையெல்லாம் கொடுத்து ரசிகர்கள் அமைதி காக்கவேண்டும் அறிவுறுத்தியிருந்தார்.

வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ – விஜய்யை வம்பிழுக்கும் அஜித் ரசிகர்கள் !

இதையடுத்து பொது வெளியில் நடிகர் அஜித்தை பார்ப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் மொட்டை தலையுடன்‌ புதிய கெட்டப்பில் பொதுவெளியில் அஜீத் வந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. அஜித் வழக்கமாக துப்பாக்கி சூடு பயிற்சிக்காக ரைபிள் கிளப் செல்வது வழக்கம். அப்படி ரைபிள் கிளப் சென்ற போது தவறுதலாக கமிஷனர் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் அஜித் எடுத்து புகைப்படங்கள்தான் சமூகவலைத்தளத்தில் வைரலாகின.

வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ – விஜய்யை வம்பிழுக்கும் அஜித் ரசிகர்கள் !

இந்நிலையில் நடிகர் அஜித், ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதில் வாத்திகெல்லாம் வாத்தி எங்க ‘தல’ என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பதிவால் விஜய்யை மீண்டும் வம்புழுக்கிறார்களா அஜீத் ரசிகர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

Share this story