அஜித்தின் அடுத்த படம் இவருடனா ?… இணையத்தை கலக்கும் புதிய தகவல்!..

அஜித்தின் அடுத்த படம்  இவருடனா ?… இணையத்தை கலக்கும் புதிய தகவல்!..

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படம்  இவருடனா ?… இணையத்தை கலக்கும் புதிய தகவல்!..

கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘துரோகி’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இந்த படத்திற்கு பிறகு மாதவனை வைத்து ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து சூர்யா வைத்து  ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

அஜித்தின் அடுத்த படம்  இவருடனா ?… இணையத்தை கலக்கும் புதிய தகவல்!..

பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இதற்கிடையே நடிகர் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருந்தார் சுதா கொங்குகரா. அஜித் இன்னும் பதில் சொல்லாத நிலையில், தற்போது அவரின் பதிலுக்கு சுதா காத்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது எச். வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் பிசியாக இருக்கிறார். வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத்துடன் மீண்டும் ஒருமுறை இணைய இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது.

அஜித்தின் அடுத்த படம்  இவருடனா ?… இணையத்தை கலக்கும் புதிய தகவல்!..

இந்நிலையில் நடிகர் அஜித்தை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார் சுதா. அப்போது கதை குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்ட கூறப்படுகிறது. அப்படியென்றால் கிட்டதட்ட சுதா கொங்கராவுடன் அஜித் இணைவது உறுதியாகிவிட்டது. வலிமை படத்திற்கு பிறகு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகுதான் மூன்றாவது முறையாக எச்.வினோத்துடன் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story