வலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்!?

வலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்!?

நடிகர் அஜித் வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படம் ரேஸிங்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 25-ம் தேதி முதல் அஜித் ஹைதராபாத்தில் நடந்து வரும் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

வலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்!?

தீபாவளி அன்று கூட அஜித் மற்றும் வலிமை படக்குழு விடுப்பு எடுக்காமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். தற்போது இந்தக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் அஜித் ஒரு மாதம் விடுப்பு எடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

வலிமை படப் பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விலகும் அஜித்!?

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Share this story