ஸ்பெயின் பறக்கும் வலிமை படக்குழு… புதிய அப்டேட் தந்த வில்லன் நடிகர்…

ஸ்பெயின் பறக்கும் வலிமை படக்குழு… புதிய அப்டேட் தந்த வில்லன் நடிகர்…

இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் விரைவில் ஸ்பெயினில் நடைபெறவுள்ளதாக வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் பறக்கும் வலிமை படக்குழு… புதிய அப்டேட் தந்த வில்லன் நடிகர்…

நடிகர் அஜீத் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘வலிமை’ திரைப்படம். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய எச் வினோத் இயக்கி வருகிறார். அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்பெயின் பறக்கும் வலிமை படக்குழு… புதிய அப்டேட் தந்த வில்லன் நடிகர்…

யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சண்டைக் காட்சிகள், பைக் சேசிங் சீன்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டது. சில காட்சிகளுக்காக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

ஸ்பெயின் பறக்கும் வலிமை படக்குழு… புதிய அப்டேட் தந்த வில்லன் நடிகர்…

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். அவர் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் பார்த்ததிலேயே மிகவும் எளிமையான மனிதர் நடிகர் அஜித். அவருடன் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் சில காட்சிகள் எடுக்கவேண்டியது. அதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளோம். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். அனுமதி வந்தால் விரைவில் இறுதிக்கட்ட ஷூட்டிங் முடிந்துவிடும் என்று கூறினார். இந்த ஷூட்டிங்கை 3 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே மே 1-ம் தேதி அஜீத் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story