அஜீத்தின் ‘வலிமை’ இந்த தேதியில் ரிலீசாகுதா ? பரபரக்கும் பின்னணி…

அஜீத்தின் ‘வலிமை’ இந்த தேதியில் ரிலீசாகுதா ? பரபரக்கும் பின்னணி…

நடிகர் அஜீத்தின் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத்தின் ‘வலிமை’ இந்த தேதியில் ரிலீசாகுதா ? பரபரக்கும் பின்னணி…

நடிகர் அஜீத்தின் ‘வலிமை’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த படத்தின் டீசர் உள்ளிட்டவை எப்போது வரும் என ரசிகர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். ‘நேர்கொண்ட பார்வை’ இயக்குனர் எச்.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்த விஷயம். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தில் சுமித்ரா, ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

அஜீத்தின் ‘வலிமை’ இந்த தேதியில் ரிலீசாகுதா ? பரபரக்கும் பின்னணி…

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத் பிறந்தநாளாக மே 1ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே போனி கபூர் அறிவித்துள்ளார். இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க படக்குழு காத்துக்கொண்டிருக்கிறது. இதற்காக ஸ்பெயின் செல்ல இருந்த நிலையில், அந்நாட்டின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

அஜீத்தின் ‘வலிமை’ இந்த தேதியில் ரிலீசாகுதா ? பரபரக்கும் பின்னணி…

இந்நிலையில் வலிமை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட் ஏற்கனவே வெளியான நிலையில் டீசர் மற்றும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜீன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதோடு வலிமை திரைப்படம் பிரம்மாண்டமாக ஆகஸ்ட்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என உறுதிப்படுப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story