வலிமை படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் மகிழ்ச்சி !

வலிமை படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் மகிழ்ச்சி !

அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் குறித்து அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் மகிழ்ச்சி !

நடிகர் அஜீத்குமார் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் மகிழ்ச்சி !

இதுவரை படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் டென்ஷனான ரசிகர்கள் தொடர்ச்சியாக வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் வலிமை அப்டேட் கேட்டனர். இதனால் அதிப்தியடைந்த அஜீத் ரசிகர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வலிமை படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் மகிழ்ச்சி !

இதையடுத்து நேற்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து அப்டேட் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங் அடுத்த எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் திட்டமிட்டப்படி அடுத்த மாதத்தில் முடிந்துவிட்டால் விரைவில் வலிமை படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story