அஜித் படத்திற்காக ட்ரீட் கொடுத்தார் விஜய்… வெங்கட் பிரபு சொன்ன ரகசியம்..

அஜித் படத்திற்காக ட்ரீட் கொடுத்தார் விஜய்… வெங்கட் பிரபு சொன்ன ரகசியம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா..  அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி  உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப்படம்  பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். யுவன் இசையமைத்திருந்தார். எப்பொதும் மாஸ் ஹீரோவாக தோன்றிய அஜித், இதில் வில்லன் ஹீரோ என்ற புதிய பரிமாணத்தில் நடித்திருந்தார். இப்போதும் மங்காத்தா படம் என்றால் அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்..
அஜித் படத்திற்காக ட்ரீட் கொடுத்தார் விஜய்… வெங்கட் பிரபு சொன்ன ரகசியம்..
இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதல், பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளங்கள் வழியே நேரலையில் பேட்டியளித்து வருகின்றனர்.  அப்படி இயக்குநர் வெங்கட் பிரபு,  மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன்  நேரலையில் கலந்துரையாடினார்.அவர் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்தார்.
அஜித் படத்திற்காக ட்ரீட் கொடுத்தார் விஜய்… வெங்கட் பிரபு சொன்ன ரகசியம்..
அப்போது விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “’’சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். முன்பிலிருந்தே அவருடன் பழக்கம் இருந்தது.  ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.
அஜித் படத்திற்காக ட்ரீட் கொடுத்தார் விஜய்… வெங்கட் பிரபு சொன்ன ரகசியம்..
அப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார். சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும” என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Share this story