‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

இந்தி, மலையாள சினிமாக்களில் இப்போது இப்படியெல்லாம் கதை பண்ண முடியுமா என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் தான் இரண்டு நாளுக்கு முன் நெட் ஃபிலிக்ஸ்ஸில் வெளியாகியிருக்கும் ‘AK vs AK’ இந்திப் படம்!

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

#MeToo என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்து வைத்த பிறகுதான் பல பேருக்கு ‘நெபொடிசம்’ என்ற வார்த்தை பரிட்சயமாகியிருக்கும். அவ்வப்போது பேசப்படுகிற விசயம்தான் என்றாலும், சமீப காலமாக சினிமாவில் தொடர்ச்சியான பேசு பொருளாகி இருக்கிறது. அது என்ன நெபோடிசம்?! ஒரு நடிகரின் வாரிசு சுலபமாக எந்தத் தகுதியுமே இல்லாமல் சினிமாவிற்க்குள் நுழைய முடியும். வளரவும் முடியும். இது உண்மையில் திறமையான நபருக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பை பறிப்பதாகும் .

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

இந்தி, தெலுங்கு, கன்னடம் தமிழ் என்று எல்லா மொழிகளிலும் பெரும்பாலும் வாரிசுகள்தான் திரையில் ஜொலிக்கிறார்கள். இதை யாராவது பகடி செய்ய முடியுமா? முடியவே முடியாது. ஆனால், அதையே பார்க்கிற அத்தனை பேரும் ‘அட… ஆமால்ல.’ என்கிறளவுக்கு செம ரகளை பண்ணியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

Anil kapoor vs Anurag kashyap என்பதைத்தான் சுருக்கி ‘AK vs AK’ என்று டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர்.இதில் அனில் ஹீரோவாகவும், அனுராக் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். கதைப்படி அனுராக் இயக்குனர். அனில் ஹீரோ. ஆரம்ப காட்சி… ஒரு தொலைகாட்சியில் விவாத நிகழ்ச்சி. தொகுப்பாளர் யார் வேண்டுமானாலும் சினிமாவில் வர முடியுமா என்று கேட்க, அனுராக் தாரளமாக வரலாம். ஆனால் அவர் பெயருக்கு பின்னால் கபூர் என்ற அடைமொழி இருக்க வேண்டியது அவசியம் என்று ஒரு சிக்சர் அடிக்க அதிரடி ஆட்டம் ஆரம்பமாகிறது.

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

பதிலுக்கு அனிலும் அனுராக்கை பைத்தியக்காரன், ரெண்டு பேரை கல்யாணம் கட்டி ஒருத்தியோடும் வாழாதவன் என்று அனுராக்கின் அந்தரங்க வாழ்க்கையை அப்பட்டமாக உரிக்கிறார். அடுத்து அனுராக்கின் மூவ் என்ன? அனில் அதை எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் கதை. அனில் கபூர், அனில் கபூராகவே வாழ்ந்திருக்கிறார் மனுஷன். சிக்ஸ்டி ப்ளஸ் வயசு என்றாலும் செம ஓட்டம் ஓடியிருக்கிறார் ! அனுராக் துரத்தல் என்றால் அப்படி ஒரு துரத்தல். இருவரும் ஒருவரையொருவர் பிராண்டி கொள்கிறார்கள். சாதாரணமாகவே இந்தியில் நடிகர் இயக்குனர்களுக்குள் ஈகோவே இருக்காது என்பதற்கு இந்தப்படம் ஒரு எடுத்துக்காட்டு. சரி தமிழில் இதை செய்ய முடியுமா? ஹீரோ டேக்கில் சொதப்பினால் கூட இயக்குனர் ஹீரோவை திட்ட மாட்டார். பதிலுக்கு அசிஸ்டெண்டுக்கு திட்டு விழும். அவ்வளவே நம் இயக்குனர்களின் எல்லை.

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

அனுராக் தயாரிப்பில் அவரது உதவியாளர் விக்ரம் மோத்வானி இயக்கியிருக்கிறார். அனில் கபூரின் மகள் சோனம் கபூர், மகன், அண்ணன் போனிக்கபூர் ஆகியோரும் நடித்திருக்கும் இந்தப்படம் திரையுலகில் புயலை கிளப்பியிருக்கிறது

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

ஒரு காட்சியில் ஒரு துணை நடிகரை பார்த்து அனில், ‘நீயும் நடிகனா..!’ என்று கேட்பார். பதிலுக்கு அவர் ‘ஏன் இந்த உலகத்துல நீ ஒருத்தன் தான் நடிகனா’ என்பார். இதை துணை நடிகர் பேசினாலும் ஒலிப்பது அனுராக்கின் குரல் என்பதுதான் மேட்டர். இப்படியெல்லாம் ஒரு காட்சியை தமிழ் சினிமாவில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இறங்கி அடிக்கிறார்கள் எல்லோரும்!

‘நாப்பது வருஷமா நீ உன்னை ஹீரோவாவே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? ஆனால் நீ ஒரு கெழ போல்டு. எல்லாம் தொங்கி போச்சு மிஸ்டர் இந்தியா’ என்பார் அனுராக். இதுவே படம் தியேட்டருக்கு வந்திருந்தால் மொத்த ரசிகர்களும் விசில் பறக்க விட்டிருப்பார்கள். பதிலுக்கு அனில் அடிக்கும் கமெண்ட் அடுத்த லெவல். அனுராக்கை, ‘முதல்வன்’ இந்தி ரீமேக்கான ‘கல்நாயக்’ ஷூட்டிங்கின் போது இயக்குனர் ஷங்கரிடம் அறிமுகப் படுத்தி, வசனமும் எழுத வாய்ப்பு பெற்று தந்தவர் அனில் கபூர். அதையும் அனில் கபூரே ஒரு காட்சியில் சொல்லியும் காட்டுகிறார் .

‘AK vs AK’… திரைக்கதையில் அடுத்த லெவலுக்குப் போயிருக்கிறார்கள்..!

மகள் கடத்தபட்ட நிலையில் 12 மணிநேரத்துக்குள் அவளை மீட்க போராடும் அப்பாவின் கதை என்கிற சின்ன லயன்தான் படம். ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால் அனிலின் உண்மையான மகள் சோனம் கடத்தப்பட, அவளை மீட்க போராடும் அனில் கபூராகவே அவர் நடித்திருப்பதுதான்! எல்லாத்தையும் சொன்னால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும். படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால்… ’மிஸ் பண்ண வேண்டாம்.’

Share this story